Wednesday, March 20, 2019

அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்

No comments :

அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்கு, தனியார் மையங்களில், பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுமற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.

பொது தேர்வு, நேற்று முடிந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த, 4,000 மாணவர்கள், இலவசபயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, துாத்துக்குடி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், உணவு, உறைவிட வசதியுடன், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.பயிற்சி வகுப்புகள்,மார்ச், 25ல் துவங்க உள்ளன. இந்த வகுப்புகளில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நீட் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பாடங்கள் நடத்த உள்ளனர்.

No comments :

CLOSE ADS
CLOSE ADS