Thursday, July 18, 2019

1,248 பள்ளிகள் மூடல்? நுாலகமாக்க அரசு முடிவு

No comments :

1,248 பள்ளிகள் மூடல்? நுாலகமாக்க அரசு முடிவு


''தமிழகத்தில், 1,248 அரசு பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்.நகர் பள்ளியில் நடந்தது. இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும், ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2017 - 18ல், பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியர் முதல், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியர் வரை, அனைவருக்கும் மூன்று வாரங்களில், லேப்டாப் வழங்கும் பணி முடியும்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது; ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1,248 பள்ளிகளில், 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை.எனவே, இந்த பள்ளிகளை மூடுவதற்கு பதில், அவற்றை நுாலகங்களாக மாற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அங்குள்ள ஆசிரியர்கள், நுாலகர்களாக பணியாற்றலாம். மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆசிரியர்களுக்கான புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments :

CLOSE ADS
CLOSE ADS